Winning entries could not be determined in this language pair.There were 2 entries submitted in this pair during the submission phase. Not enough entries were submitted for this pair to advance to the finals round, and it was therefore not possible to determine a winner.Competition in this pair is now closed. |
ஒரு காலத்தில் கணினி விளையாட்டுகள் ஒரே மாதிரி இருந்தன. துப்பாக்கியால் சுடும் முதல் நபர் (அப்போது பெயரிடப்படாத வகை) ஒரு “வலுவான தலைப்பு” என்று கருதப்படலாம் என்ற எண்ணம் ஒருபுறம் இருக்கட்டும், 1993 ஆம் ஆண்டில் எங்களிடம் “சாதாரண விளையாட்டு” என்ற சொல் கூட இல்லை. அப்போது கணினி விளையாட்டுகளை விளையாடியவர்களும், விளையாடதவர்களும் இருந்தனர். கோல்ஃப் அல்லது ஹார்பூன் (திமிங்கல வேட்டை கருவி) அல்லது இதயங்கள் அல்லது உரையின் சாகசங்களுக்குள் நுழைந்தவர்கள் - அவர்கள் “உறுதியான” வீரர்கள், அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த களத்தை வெறித்தனமாக விளையாடினர். மிஸ்ட் என்னும் கிராஃபிக் சாகச புதிர் வீடியோ விளையாட்டு மற்றும் சிடி-ரோம் எனப்படும் குறுவட்டு வாசப்பு நினைவகமும் இறுதியாக பொதுமக்கள் சந்தையை ஆக்கிரமித்த போது, இந்த சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டது. மைஸ்ட் என்னும் சாகச வீடியோ விளையாட்டு வீடியோ விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்று அதனை வடிவமைத்த ராபர்ட் மில்லர் தெளிவுபடுத்துகிறார். அது அவர்களுக்கு விற்கப்பட்டது. கம்ப்யூட்டர் கேமிங் வேர்ல்ட் போன்ற துடிப்பான பத்திரிகைகளால் கூட இந்தத் தொழிலுக்கு இனி சுவை கூட்ட முடியாது: இந்த பத்திரிகைகளைப் படிக்காத மில்லியன் கணக்கான மக்கள் இந்த விளையாட்டுகளை வாங்குகின்றனர். புதிய இன வீரன் உருவாகிவிட்டான். இந்த சூழ்நிலையில், எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சூத்திரத்தை உருவாக்குவதை விட இயல்பான விஷயம் எதுவாக இருக்கமுடியும்? மிகவும் உண்மையான முறையில், அது ஏற்கனவே உண்மைதான். மிஸ்டின் மிகச்சிறந்த கதை என்னவென்றால், “ஹார்ட்கோர்” விளியாட்டு பத்திரிகைகளும் மற்றும் விளையாட்டு அமைப்புகளும் அதைத் தொடங்கும்போது கடுமையாக குறை கூறின. அதை ஏற்க மறுத்தன. அதை ஸ்லைடுஷோ என்று அழைத்தனர். சுருக்கமான, முட்டாள்தனமான புதிர்கள்; கருத்தாழம் இல்லாத அழகான கிராபிக்ஸ். "உலகெங்கும் உள்ள விமர்சகர்கள் மற்றும் ஹார்ட்கோர் விளையாட்டு வீரர்கள் இதை, உண்மையான விளையாட்டுடன் தொடர்பு இல்லாத, ஸ்லைடு-ஷோவாக வர்ணித்தனர்," என்று பிசி கேமரின் மைக்கேல் உல்ஃப் 2001 இல் கூறினார். அதே ஆண்டில், மேக்சிமம் பிசிக்கான ஒரு கட்டுரையாளர் மிஸ்டை ஒரு "கடினமான குறியீட்டை உடைத்தல் மற்றும் சுவிட்சை இயக்கும் அணைக்கும் குழப்பம்" என்று நினைவு கூர்ந்தார், மேலும் அதன் புதிய ரீமேக் ரியல் மிஸ்ட்டை "பத்திரிகைகள் ஏன் முதலில் வெளிவந்த அசலை குறை கூறின என்பதற்கான ஒரு நினைவூட்டலை" நிரூபிப்பதாக இருந்தது." | Entry #32405 — Discuss 0 — Variant: India
|
கணினி விளையாட்டுக்கள் ஒரு காலத்தில், ஒருங்கிணைந்திருந்தன. 1933 இல் முதல் நிலை விளையாட்டு நபர் (அப்போது அது ஒரு பெயரிடப்படாத வகை) ஒரு 'தீவிர விளையாட்டு அபிமானி' என்று கருதப்படாததை கூட விட்டுவிடுவோம் அப்போது, நம்மிடையே 'பொழுதுபோக்கு விளையாட்டு' என்ற வார்த்தை கூட இல்லாதிருந்தது. அந்த சமயத்தில் கணினி விளையாட்டுக்களை விளையாடுபவர்களும் இருந்தார்கள் மற்றும் அதை விளையாடாதவர்களும் இருந்தார்கள். கோல்ஃப்,அல்லது ஹார்பூன் அல்லது ஹார்ட்ஸ் அல்லது டெக்ஸ்ட் வீர விளையாட்டுக்களை விளையாடியவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டுக்களில் பிடிவாத மனத்தோடு தீவிரமாக ஈடுபட்டார்கள் - அவர்கள்தான் "தீவிரமான" விளையாட்டுவீரர்கள் இறுதியில் மிஸ்ட் மற்றும் சிடி-ரோம் வெகுஜன சந்தையை ஆக்கிரமித்த போது இந்த சுற்றுச்சூழல் அமைப்பு தகர்க்கப்பட்டது. ராபின் மில்லர் தெளிவாகச் சொன்னபடி, மிஸ்ட் ஆனது விளையாட்டில் ஈடுபடாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. கம்ப்யூட்டர் கேமிங் வோர்ல்ட் போன்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கான சஞ்சிகைகள் இந்தத் துறைக்கான ஆர்வமூட்டும் பாதையை இதன் பிறகு வகுக்க முடியவில்லை: இந்த சஞ்சிகைகளை வாசிக்காத மில்லியன் கணக்கிலான ஆர்வலர்கள் விளையாட்டுக்களை வாங்கினார்கள். முற்றிலும் புதிதாக உருவாகிவந்த விளையாட்டு ஆர்வலர். இந்த சூழ்நிலையில், நாமும் மற்றும் நமக்கெதிராக அவர்களும் என்ற சூத்திரத்தை இட்டுக்கட்டி உருவாக்குவதைத் தவிர வேறு எது இயற்கையாக நிகழமுடியும்? இதுதான் மிக உண்மையான வழி, அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. மிஸ்ட்டின் மிகச்சிறந்த கதையாடல் என்னவென்றால்,அது வெளியிடப்பட்டபோது "தீவிரமான" விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் அஸ்திவாரம் அதைக் கடுமையாகத் தாக்கியது. அதை அனாதையாக்கியது. அதை ஒரு படவில்லைக் காட்சி என்று அழைத்தார்கள்.பொய்யான முட்டாள்தனமான புதிர்கள்; வெறும் படக்காட்சிகள் அதில் ஆழமில்லை என்றார்கள்." விமர்சகர்களும், தீவிரமான விளையாட்டு வீரர்களும் அதை ஒரு படவில்லைக் காட்சியாகவும் மற்றும் அதில் விளையாட்டு ஊடாடல்கள் கொஞ்சம் கூட இல்லை என்று பொதுப்படுத்தினார்கள்" என்று 2001 ஆம் ஆண்டு தனிநபர் கணினி விளையாட்டுகளின் ஆர்வலர் மைக்கேல் உல்ஃப் கூறினார். அதே வருடம், மேக்ஸிம் பிசியின் கட்டுரையாளர் ஒருவர் மிஸ்ட் விளையாட்டை " குறியீடுகளை தகர்க்கும் மற்றும் பொத்தான்களை எறியும் குழப்பமான சலிப்பூட்டும் விளையாட்டு" என்று நினைவூட்டினார். மற்றும் அதன் புதிய மறு ஆக்கமான ரியல் மிஸ்ட் விளையாட்டை, "அதன் மூலம் வெளியிடப்பட்டபோது, பத்திரிக்கையாளர்கள் அதை ஏன் ஒதுக்கித்தள்ளினார்கள் என்பதற்கான நினைவூட்டுக் குறியீடு அது" என்றும் அப்போது அதைக் கணித்தார். | Entry #32590 — Discuss 0 — Variant: India
|